» சினிமா » செய்திகள்
சீனாவில் ரஜினி பட வசூலை முறியடித்த மகாராஜா!
திங்கள் 2, டிசம்பர் 2024 5:17:27 PM (IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் சீனாவில் "எந்திரன் 2.0" படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. இப்படம் முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் 'மகாராஜா' 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் கடந்த 29-ந் தேதி வெளியிட்டனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தைப் பெற்ற அலிபாபா குழுமம் சுமார் 40,000 திரைகளில் படத்தை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடி வசூல் செய்தது. தற்போது சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 26 கோடி வசூலை எட்டியுள்ளதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சீனாவில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த கோலிவுட் படமான இயக்குனர் ஷங்கரின் "எந்திரன் 2.0" படத்தின் வசூல் சாதனையை 'மகாராஜா' படம் முறியடித்துள்ளது. சீனாவை தொடர்ந்து ஜப்பானிலும் 'மகாராஜா' படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)
