» சினிமா » செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
புதன் 27, நவம்பர் 2024 11:44:43 AM (IST)

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14-ந் தேதி 'கங்குவா' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளார். 19 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இப்படத்தின் முற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் தொடங்க உள்ளது. அதற்காக படக்குழுவினர் இன்று மாசாணியம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளனர். அடுத்ததாக, முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நாளை தொடங்க உள்ளதாகவும், சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)
