» சினிமா » செய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன்!

திங்கள் 6, மே 2024 12:00:38 PM (IST)



மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் ஃபாசில் நடித்த படம் ’மாமன்னன்’. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ‘வாழை’ என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கிவந்தார். குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கும் மற்றொரு புதிய படத்துக்கு ‘பைசன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இதனை தயாரிக்கின்றன. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய காளை சிலைக்கு முன்னால் நாயகன் துருவ் விக்ரம் அமர்ந்திருப்பது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதில் பா.ரஞ்சித், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாரி செல்வராஜின் முந்தைய படங்களில் சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றியிருந்த நிலையில், இப்படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory