» சினிமா » செய்திகள்

திரைப்பட இயக்குநர் சூரியகிரண் காலமானார்..!!

திங்கள் 11, மார்ச் 2024 5:16:42 PM (IST)

திரைப்பட இயக்குநர் சூரியகிரண் (48) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 

மௌன கீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சூரியகிரண் நடித்துள்ளார். சூரியகிரண் என்ற பெயரில் தெலுங்கில் சத்யம் படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். மேலும், சத்யம், தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜுபாய், அத்தியாயம் 6 போன்ற தெலுங்கு படங்களை இயக்கி உள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு நடிகை காவேரியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா இவரது தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூரியகிரண், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னையில் இன்று காலமானார். இவர் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள அரசி படத்தை சூரியகிரண் இயக்கியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory