» சினிமா » செய்திகள்

கமல்ஹாசன் படத்தை இயக்கும் அன்பறிவ் சகோதரர்கள்!

சனி 13, ஜனவரி 2024 10:57:16 AM (IST)



கமல்ஹாசன் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2898ஏடி’ படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையில், அவர் ஹெச்.வினோத் உடன் இணையும் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமலின் புதிய படமான ‘237’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். மேலும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த மற்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. 

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. அன்பறிவ் இரட்டையர்களுக்கு ‘கேஜிஎஃப்’ படத்துக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின் லைன்அப்பில் உள்ள ‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்ற உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory