» சினிமா » செய்திகள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக் கோரி மனுத்தாக்கல்!

புதன் 3, ஜனவரி 2024 5:04:44 PM (IST)

லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'லியோ' திரைப்படத்தில் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளார்.

இதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூக விரோத கருத்துகளை 'லியோ' படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார். இது போன்ற படங்களை தணிக்கை குழு முறையாக அய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 'லியோ'படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.


மக்கள் கருத்து

வேடிக்கை பார்ப்பவன்Jan 3, 2024 - 09:28:03 PM | Posted IP 162.1*****

லோகேஷ் எல்லாம் சும்மா, அட சினிமா முட்டா பீச் களா சினிமாவை சினிமாவாக பாருங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory