» சினிமா » செய்திகள்

வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

திங்கள் 1, ஜனவரி 2024 11:32:18 AM (IST)



வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ்,  சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 

இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (டிச.31) மாலை 6 மணிக்கு படக்குழுவால் வெளியிடப்பட்டது. கோட் (G.O.A.T. - The Greatest Of All Times) என்ற வாசகத்துடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.  இரண்டு விஜய் தோற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory