» சினிமா » செய்திகள்

விஜயகாந்த் மறைவுக்கு மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!

வியாழன் 28, டிசம்பர் 2023 4:22:02 PM (IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு மம்மூட்டி, மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளனர்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களும் விஜயகாந்த் மறைக்கு வருத்தத்தைப் பதிவிட்டுள்ளனர்.  முக்கியமாக, பல துணை நடிகர்கள் நேரில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உருக்கமாக பேசி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் மம்மூட்டி "விஜயகாந்த் இனி நம்முடன் இல்லை. என் நல்ல நண்பராக இருந்தவர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். சினிமா விரும்பிகள், திரைத்துறையினர் உள்பட என்னாலும் இவரின் இழப்பு எத்தகையது என்பதை உணர முடிகிறது. அவரது குடும்பத்திற்கு என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

நடிகர் மோகன்லாலும் எக்ஸ் தளத்தில், "சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். " எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory