» சினிமா » செய்திகள்

நடிகர் முத்துக்காளை 3-வது பட்டம் பெற்று அசத்தல்!

செவ்வாய் 26, டிசம்பர் 2023 10:22:52 AM (IST)

நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.Lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது அவரின் 3-வது பட்டம் (degree) என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என கனவு கொண்ட முத்துக்காளை தனது 18-வது வயதில் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வென்றார். இதையடுத்து, சினிமா மீது இருந்த காதலால் தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சென்னை வந்தவர், சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார். 

தொடர்ந்து 1997-ம் ஆண்டு வெளியான ‘பொன்மனம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், வடிவேலுவின் நகைச்சுவைக்குழுவில் இடம்பெற்று நகைச்சுவை நடிகராக கவனம் பெற்றார். கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான ‘பேய் இருக்க பயமேன்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார் முத்துக்காளை. இது இவரது மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் பி.ஏ. வரலாறு படித்தவர் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 58 வயதாகும் இவர் 3 பட்டங்களைப் பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory