» சினிமா » செய்திகள்

ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது பாலியல் புகார்

சனி 23, டிசம்பர் 2023 11:48:29 AM (IST)

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது அவரது முன்னாள் உதவியாளர் பாலியல் புகார் அளித்துள்ளார். 

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல். இவர் ‘பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ்' வரிசை படங்கள் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார். இந்த வரிசையில் 10 படங்கள் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தின. வின் டீசலுக்கு தற்போது 56 வயது ஆகிறது. இந்த நிலையில் வின் டீசல் மீது அவரது முன்னாள் உதவியாளர் ஆஸ்டா ஜான்சன் பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "வின் டீசல் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அட்லாண்டாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தார். அதிகாலையில் புகைப்பட கலைஞர்கள் வருவதை அறிந்து எல்லோரையும் வெளியே போகச் செய்தோம்.

வின் டீசலை படப்பிடிப்புக்கு அழைத்து செல்லும் பணி எனக்கு ஒதுக்கப்பட்டது. அறையில் இருந்த பெண்கள் சென்ற பிறகு வின் டீசல் என்னிடம் தவறாக நடந்தார். வலுக்கட்டாயமாக இழுத்து முத்தமிட்டார். பலவந்தமாக ஆடைகளை அகற்றி பாலியல் தொல்லை கொடுத்தார். நான் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவரது சகோதரி என்னை உடனடியாக வேலையில் இருந்து நீக்கி விட்டார்” என்று கூறியுள்ளார். இது ஹாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory