» சினிமா » செய்திகள்

ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தின் டீஸர் வெளியீடு

புதன் 13, டிசம்பர் 2023 11:00:25 AM (IST)



ரஜினி நடித்து வரும் புதிய படத்திற்கு 'வேட்டையன்' என்று படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் பட தலைப்புடன் டீசர் வெளியிட்டுள்ளது. 

ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்திற்கு பின்னர், ஜெய்பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், தலைவர் 170 பெயரில் உருவாகி வந்த படத்துக்கு 'வேட்டையன்' என்று படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் பட தலைப்புடன் படக்குழு டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory