» சினிமா » செய்திகள்
லியோ படத்தில் சஞ்சய் தத் விடியோ: எல்சியூ உறுதியானதா?
சனி 29, ஜூலை 2023 5:48:14 PM (IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. நடிகர் சஞ்சய் தத் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது விடியோவினை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ படத்தில் சஞ்சய் தத் பெயர் ‘ஆண்டனி தாஸ்’ என படக்குழு தெரிவித்துள்ளது.
விக்ரம் இறுதிக் காட்சியில் ‘ரோலக்ஸ்' சூர்யா பேசும்போது மிகப் பெரிய கூட்டம் இருக்கும். அதேபோல ஒரு காட்சியை சஞ்சய் தத் விடியோவிலும் இருப்பதாலும் மேலும் கழுகு (ஈகள்) இருக்கும் காட்சியும் காட்டப்படுகிறது.விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு ‘ஈகள் இஸ் கம்மிங்’ என்று ஒரு பாடல் வரும். இதனால் இது நிச்சயமாக எல்சியூவில் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) வருமென ரசிகர்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.