» சினிமா » செய்திகள்

24 மணி நேரத்தில் 110 மில்லியன் பார்வைகள் : சாதனை படைத்த ‘ஜவான்’ பிரிவியூ!

புதன் 12, ஜூலை 2023 11:55:31 AM (IST)



அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் பிரிவ்யூ வெளியான 24 மணி நேரத்தில் 110 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. 

இப்படத்தின் ‘பிரிவ்யூ’ கடந்த ஜூலை 10 அன்று வெளியானது. இதில் முதல்முறையாக ஷாருக்கான் மொட்டைத் தலையுடன் தோன்றியிருந்தார். இந்நிலையில், வெளியான 24 மணி நேரத்தில் 110 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று ‘ஜவான்’ பிரிவ்யூ சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 109 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. தற்போது அதனை பின்னுக்குத் தள்ளியுள்ளது ‘ஜவான்’ பிரிவ்யூ.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory