» சினிமா » செய்திகள்

மாமன்னன் திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு!

புதன் 5, ஜூலை 2023 11:33:50 AM (IST)



"சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அருமையான படைப்பு" என்று மாமன்னன் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இப்படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் படக்குழுவினரை வாழ்த்தி பாராட்டியுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு  எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory