» சினிமா » செய்திகள்

திருப்பதி கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!

திங்கள் 3, ஜூலை 2023 11:45:00 AM (IST)

திருப்பதி கோவிலில் மகன்களுடன் சுவாமி தடரிசனம் செய்த நடிகர் தனுஷ், மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் தாடி, மீசை, நீண்ட முடியுடன் நடித்து வந்த நிலையில், தன்னுடைய காட்சிகளை அவர் முடித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் திருப்பதி கோவிலுக்கு தனது பெற்றோர் மற்றும் மகன்கள் யாத்ரா - லிங்காவுடன் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளார். இது குறித்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் தனுஷ் அடுத்ததாக 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் இணைந்துள்ளார். கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், "தேரே இஸ்க் மேன்" திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory