» சினிமா » செய்திகள்

இந்தியன் படத்தின் 3-ம் பாகம்:உதயநிதி தகவல்!

சனி 1, ஜூலை 2023 12:39:51 PM (IST)

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் படத்தின் 3-ம் பாகத்தை எடுக்கும் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல்பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த சில வாரங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை படமான காட்சிகளை கமல்ஹாசன் பார்த்து மகிழ்ந்து ஷங்கருக்கு கைக்கடிகாரம் பரிசு வழங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியன் படத்தின் 3-ம் பாகத்தை எடுக்கும் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, "இந்தியன் 3-ம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன'' என்று தெரிவித்து உள்ளார். இந்தியன் 2-ம் பாகம் வெளியானதும் 3-ம் பாகத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு இந்தியன் 3-ம் பாகம் உருவாகும் என்று தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory