» சினிமா » செய்திகள்

மாமன்னன் திரைப்படத்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து: உதயநிதி ஸ்டாலின் நன்றி!!

வியாழன் 29, ஜூன் 2023 7:48:08 AM (IST)



‘மாமன்னன்’ திரைப்படம் வெற்றிபெற நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். 

படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ‘மாமன்னன்’ படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory