» சினிமா » செய்திகள்

நடிகர் விஜய்யுடன் என்ன பிரச்சனை? உதயநிதி ஓபன் டாக்!

திங்கள் 26, ஜூன் 2023 12:28:43 PM (IST)



தனக்கும் நடிகர் விஜய்க்கும் உள்ள பிரச்னை தொடர்பாக உதயாநிதி ஸ்டாலின் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

விநியோகஸ்தராக இருந்து பிறகு தயாரிப்பாளராக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். முதன்முறையாக தரணி இயக்கத்தில் விஜய்யை வைத்து குருவி என்ற படத்தை தயாரித்தார். கடந்த 2008ஆம் வருடம் வெளியான அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இருப்பினும் அதன் பின்னர் பணியாற்றவில்லை. 

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், "விஜய் அவ்வளவு எளிதில் யாரிடமும் நண்பராகி விடமாட்டார். அப்படி நண்பரானால் மிகவும் நெருக்கமாக பழகுவார் விஜய். அந்த வகையில் நானும் விஜய்யும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.

என்ன பிரச்னை: ஆனால் குருவி படம் வெளியான பிறகு என்னிடம் அவரைபற்றியும், அவரிடம் என்னைப்பற்றியும் சிலர் தவறாக பேசினார்கள். இதன் காரணமாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. இதையடுத்து அவரை நேரில் சந்தித்து நடந்ததை கூறிய பிறகு நாங்கள் மீண்டும் நண்பர்களாகி விட்டோம்" என்றார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory