» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ஜண்டு குமாருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 25, ஜூலை 2026 4:14:59 PM (IST)
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் கணக்கைத் தொடங்கி வைத்துள்ள வீரர் ஜண்டு குமாருக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் (Para Powerlifting) போட்டியில் இந்திய வீரர் ஜண்டு குமார் அபாரமாகச் செயல்பட்டு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2026 காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து அவர் சாதனை படைத்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து:
வெண்கலப் பதக்கம் வென்றுள்ள ஜண்டு குமாரைப் பாராட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "#CWG2026-ல் ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைத்துள்ள ஜண்டு குமாரின் செயல்பாடு அபாரமானது! அவருக்கு வாழ்த்துகள்.
அவரது இந்தச் சாதனை, அளவற்ற வலிமை, தளராத உறுதி மற்றும் பல ஆண்டுகால ஒழுக்கமான முயற்சி ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். ஒவ்வொரு சவாலையும் வென்று, ஒட்டுமொத்த தேசத்தையும் அவர் பெருமைப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் சாம்பியன்!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:46:51 AM (IST)

ஐசிசி தரவரிசை: பும்ராவைப் பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)


