» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
4 தொடர்களில் 3-இல் தோல்வி: சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து எழும் விமர்சனங்கள்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:22:23 PM (IST)

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் சுப்மன் கில்லின் பயணம் எதிர்பார்த்த அளவிற்குக் கைக்கொடுக்கவில்லை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ரோகித் சர்மாவுக்குப் பின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற சுப்மன் கில், இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போதிலும், அடுத்த இரு ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியடைந்து தொடரை இழப்பிற்கு உள்ளாக்கியது.
சுப்மன் கில் தலைமையில் இந்தியா இதுவரை விளையாடிய 4 ஒருநாள் தொடர்களில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஏனைய 3 தொடர்களிலும் தோல்வியைச் சந்தித்ததால் அவரது கேப்டன்ஷிப் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முதல் 12 ஒருநாள் போட்டிகளில் கேப்டன்களின் வெற்றி சதவீதம்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய கேப்டன்கள் தங்களது முதல் 12 ஒருநாள் போட்டிகளில் பதிவு செய்த வெற்றி சதவீதப் பட்டியல்:
ரோகித் சர்மா: 83.34% (10 வெற்றி / 2 தோல்வி)
விராட் கோலி: 75.00% (9 வெற்றி / 3 தோல்வி)
கே.எல். ராகுல்: 66.67% (8 வெற்றி / 4 தோல்வி)
கபில் தேவ் / சேவாக்: 58.33% (7 வெற்றி / 5 தோல்வி)
சுப்மன் கில்: 50.00% (6 வெற்றி / 6 தோல்வி)
எம்.எஸ். தோனி: 41.67% (5 வெற்றி / 7 தோல்வி)
சுனில் கவாஸ்கர்: 25.00% (3 வெற்றி / 9 தோல்வி)
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் சாம்பியன்!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:46:51 AM (IST)

ஐசிசி தரவரிசை: பும்ராவைப் பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)


