» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கிரிக்கெட் மைதானத்தில் கைகலப்பு: இலங்கை வீரர்களுடன் மல்லுக்கட்டிய இளம் வீரர் சூர்யவன்ஷி!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:44:13 AM (IST)

முத்தரப்பு ஏ ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில், சூப்பர் ஓவர் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் 15 வயது இளம் பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர்களுடன் மைதானத்திலேயே கைகலப்பு வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்கலான வெளிச்சம் காரணமாக ஆட்டம் சமனில் முடிந்த போது, விதிமுறைகளின்படி சூப்பர் ஓவர் நடத்துவதற்கான வசதி முதலில் இல்லை என்று கூறப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த இந்தியா ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா, மைதான நடுவர்களுடன் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாகக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
இந்த விவாதத்தின் போதே குறுக்கே புகுந்த வைபவ் சூர்யவன்ஷியை, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிருஷிகேஷ் கனித்கர் தடுத்துப் பின்னுக்கு இழுத்தார். சூப்பர் ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ககுதாஸ் மாத்துலனின் பந்துவீச்சை எதிர்கொண்ட இந்தியா ஏ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மாத்துலன் வீசிய கடைசி 3 பந்துகளைச் சந்தித்த சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இந்தியா ஏ அணி தனது இரண்டாவது தொடர் தோல்வியைத் தழுவியது. ஆட்டம் முடிந்ததும் இலங்கை வீரர்கள் எல்லோரையும் கவரும் வகையில் 'ஓவர் தி டாப்' (Over the top) முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூர்யவன்ஷியும் அவரது பார்ட்னர் சூர்யான்ஷ் ஷெட்கேவும் பெவிலியன் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பந்துவீச்சாளர் மாத்துலன் ஏதோ கூற, இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி அவரை நோக்கிப் பாய்ந்தார். உடனே இலங்கை வீரர் விஷேன் ஹாலம்பாகே குறுக்கே வந்து தடுக்க முயன்றார். ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சூர்யவன்ஷி, ஹாலம்பாகேவை கைகளால் பலமாகத் தள்ளிவிட்டார். பதிலுக்கு அந்த வீரரும் சூர்யவன்ஷியைத் தாக்க முயன்றார். நிலைமை கைமீறிச் சென்ற போது, இலங்கையின் மூத்த சர்வதேச வீரர் நிரோஷன் டிக்வெல்லா குறுக்கே வந்து இருவரையும் பிரித்து வைத்தார்.
ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?
விளையாட்டு உணர்வுக்கு எதிராகவும், ஐசிசி விதிமுறைகளை மீறியும் மைதானத்தில் கைகலப்பில் ஈடுபட்ட சூர்யவன்ஷிக்கு, போட்டி கட்டணத்தில் 50% அபராதம் அல்லது டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் உத்தியோகபூர்வமாகத் தடையை அறிவிப்பாரா அல்லது வெறும் எச்சரிக்கையுடன் விடுவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கேப் வெர்டே!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:44:52 PM (IST)

முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் தொடர் சென்னையில் தொடக்கம் - பிசிசிஐ தகவல்!
திங்கள் 15, ஜூன் 2026 5:16:16 PM (IST)

தீப்தி சர்மா 5 விக்கெட் சாதனை: மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
திங்கள் 15, ஜூன் 2026 3:43:32 PM (IST)

மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
சனி 13, ஜூன் 2026 11:51:44 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து 2026 கோலாகலத் தொடக்கம்: மெக்சிகோ, அமெரிக்கா அணிகள் அபார வெற்றி!
சனி 13, ஜூன் 2026 10:20:39 AM (IST)

அறிமுக போட்டியிலேயே அசத்திய மானவ் சுதர்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி
செவ்வாய் 9, ஜூன் 2026 8:25:54 AM (IST)


