» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:12:49 PM (IST)

டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, 131 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்த மகத்தான வெற்றிக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியைக் கௌரவிக்கும் விதமாக, பிசிசிஐ இன்று பரிசுத் தொகையை அறிவித்தது. அதன்படி, இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணைக் குழுவினர் (Support Staff) அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உலகக் கோப்பையை வென்றதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில் இந்திய அணிக்கு ஏற்கனவே சுமார் 27 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் சாம்பியன்!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:46:51 AM (IST)

ஐசிசி தரவரிசை: பும்ராவைப் பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)


