» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

வியாழன் 25, செப்டம்பர் 2025 4:17:00 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பட்டியலை  தேர்வு குழு தலைவர் அகர்கர் அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை தேர்வு குழு தலைவர் அகர்கர் இன்று துபாயில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். சுப்மன் கில் தலைமையிலான அணியில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர்கள்  சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஜெகதீசன் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory