» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்ச்சைக்குரிய சைகை: பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார்!

வியாழன் 25, செப்டம்பர் 2025 10:38:42 AM (IST)

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில்  சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.

நடப்பு ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்களான சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரவூப் மீது நடவடிக்கை கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.

ஹாரிஸ் ரவூப் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போல சைகை செய்து காட்டி இந்திய ரசிகர்களை சீண்டினார். மறுபுறம் பர்ஹான் அரைசதம் அடித்ததும் துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் கொண்டாடினார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது. அத்துடன் அவர்கள் செய்த சைகையின் வீடியோ காட்சிகளை ஆதாரமாக பி.சி.சி.ஐ. சமர்ப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory