» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு விருது!
புதன் 6, ஆகஸ்ட் 2025 10:49:17 AM (IST)

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரில் 284 ரன்கள் குவித்த வாஷிங்டன் சுந்தர், 7 விக்கெட்களையும் கைப்பற்றினார். மேலும் டிராவில் முடிந்த டெஸ்ட் போட்டியில் சதமும் விளாசினார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருதை வாஷிங்டன் சுந்தருக்கு வழங்க விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த விருதை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஜடேஜா உள்ளிட்டோர் இணைந்து வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கினர்.
விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் வாஷிங்டன் சுந்தர் பேசும்போது, "இங்கிலாந்து போன்ற மண்ணில் தொடர்ந்து 4 டெஸ்ட் விளையாடியதை நான் பெருமையாக கருதுகிறேன். களத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்தோம். களத்தில் நாம் உத்வேகமாக செயல்பட்டோம். எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெய்ஸ்வால் அபார சதம்.. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா ரன்குவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 5:45:22 PM (IST)

இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி விதா்பா சாம்பியன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:41:29 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
திங்கள் 6, அக்டோபர் 2025 8:29:53 AM (IST)

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
சனி 4, அக்டோபர் 2025 4:22:32 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!!
சனி 4, அக்டோபர் 2025 4:17:33 PM (IST)

ஆமதாபாத் வெஸ்ட் : கேஎல் ராகுல், ஜூரெல், ஜடேஜா சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
வெள்ளி 3, அக்டோபர் 2025 5:21:42 PM (IST)
