» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் யூரோ கோப்பை: ஸ்பெயினை வீழ்த்தி பட்டம் வென்ற இங்கிலாந்து!
திங்கள் 28, ஜூலை 2025 11:23:21 AM (IST)

மகளிருக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் யூரோ கோப்பையை இங்கிலாந்து அணி தக்கவைத்துள்ளது. கடந்த 2022-ல் நடைபெற்ற மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் முதல் முறையாக யூரோ கோப்பையை இங்கிலாந்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்ட நேரத்தில் சுமார் 65 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் அணி. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் தரப்பில் கால்டென்டே கோல் பதிவு செய்தார். பின்னர் இங்கிலாந்து அணி தரப்பில் ரூசோ 57-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
மேற்கொண்டு இரு அணியும் கோல் பதிவு செய்ய முடியாததால் 90 நிமிடங்கள் நிறைவடைந்தது. பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணியின் தரப்பிலும் கோல் பதிவு செய்யப்படவில்லை. வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று யூரோ சாம்பியன் ஆனது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

கவுகாத்தி டெஸ்டில் வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா: இந்தியா 201 ரன்னில் ஆல்-அவுட்
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அபார வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா..!
சனி 22, நவம்பர் 2025 4:31:08 PM (IST)

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ச்சி: 100 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை..!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:25:58 PM (IST)


.gif)