» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரிஷப் பண்ட் காலில் எலும்பு முறிவு: தமிழக வீரர் இந்திய அணியில் சேர்ப்பு!
திங்கள் 28, ஜூலை 2025 11:06:40 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டுக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவர் துடித்தார்.
உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார். ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயர டப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் இந்திய அணிக்காக மீண்டும் வந்து விளையாடிய பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

கவுகாத்தி டெஸ்டில் வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா: இந்தியா 201 ரன்னில் ஆல்-அவுட்
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அபார வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா..!
சனி 22, நவம்பர் 2025 4:31:08 PM (IST)

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ச்சி: 100 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை..!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:25:58 PM (IST)


.gif)