» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சனுக்கு பீல்டிங்கின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2-வது போட்டிக்கு முன் முழு உடற்தகுதி பெற்றால் அவர் களமிறங்குவார் என்று கூறப்பபடுகிறது. இந்நிலையில் 2வது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பர்மிங்காம் சென்ற இந்திய அணியுடன் அவர் பயணிக்கவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்த 2வது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பும்ரா விளையாடுவதற்காக 2வது போட்டியில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் பிடித்தார்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:38:17 PM (IST)

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 9:00:01 PM (IST)

தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
சனி 16, ஆகஸ்ட் 2025 5:51:00 PM (IST)

பாகிஸ்தானை வீழ்த்தி 34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மே.இ.தீவுகள் அணி சாதனை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:03:05 AM (IST)

ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு 14 பதக்கம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:33:46 PM (IST)
