» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய ஹாக்கி போட்டி: கோவில்பட்டி, கர்நாடகா உள்பட 7 அணிகள் காலிறுதிக்கு தகுதி!
வியாழன் 29, மே 2025 9:02:23 AM (IST)
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின், காலிறுதிச் சுற்றுக்கு புதுதில்லி, புவனேஸ்வரம், கோவில்பட்டி, மும்பை, செகந்திராபாத், பெங்களூரு, கர்நாடகா அணிகள் தகுதி பெற்றன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின், காலிறுதிச் சுற்றுக்கு புதுதில்லி, புவனேஸ்வரம், கோவில்பட்டி, மும்பை, செகந்திராபாத், பெங்களூரு, கர்நாடகா அணிகள் தகுதி பெற்றன.
6ஆவது நாளான நேற்று புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை இண்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதியதில், இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலை பெற்றன. மாலையில் நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதியதில் 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது.
3ஆவது ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதியதில் 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் மும்பை மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது. 4 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி அணியும், புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மோதியதில் 3-க்கு0 என்ற கோல் கணக்கில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் பிடித்தார்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:38:17 PM (IST)

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 9:00:01 PM (IST)

தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
சனி 16, ஆகஸ்ட் 2025 5:51:00 PM (IST)

பாகிஸ்தானை வீழ்த்தி 34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மே.இ.தீவுகள் அணி சாதனை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:03:05 AM (IST)

ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு 14 பதக்கம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:33:46 PM (IST)
