» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ப்ரியான்ஷ் - இங்லிஸ் அபாரம்: மும்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப்!
செவ்வாய் 27, மே 2025 10:11:08 AM (IST)

ஐபிஎல் 2025 தொடரின் 69வது ஆட்டத்தில் ப்ரியான்ஷ் ஆர்யா - ஜோஷ் இங்லிஸ் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் மும்பையை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது.
ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இரவு 7.30-க்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரியான் ரிக்கல்டன் 27 ரன்களும், ரோஹித் சர்மா 24 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 57 அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். திலக் வர்மா 1, வில் ஜாக்ஸ் 17, ஹர்திக் பாண்டியா 26 என 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
185 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரியான்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 65 ரன்கள் விளாசி அசத்தினார். மறுமுனையில் ஆடிய ப்ரப்சிம்ரன் சிங் 13 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜோஷ் இங்லிஸ் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 26, நேஹல் வதேரா 2 என 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மும்பை வீழ்த்தியது பஞ்சாப் அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றது பஞ்சாப் அணி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் பிடித்தார்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:38:17 PM (IST)

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 9:00:01 PM (IST)

தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
சனி 16, ஆகஸ்ட் 2025 5:51:00 PM (IST)

பாகிஸ்தானை வீழ்த்தி 34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மே.இ.தீவுகள் அணி சாதனை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:03:05 AM (IST)

ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு 14 பதக்கம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:33:46 PM (IST)
