» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அதிக சிக்ஸர் வாரிவழங்கிய பந்துவீச்சாளர் : முதலிடத்தில் முகமது சிராஜ் உடன் இணைந்த ரஷீத் கான்!
திங்கள் 26, மே 2025 11:51:26 AM (IST)
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையில் முகமது சிராஜ் உடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று மாலை அரங்கேறிய 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 57 ரன்களும், கான்வே 52 ரன்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அன்ஜூல் கம்போஜ், நூர் அகமது தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
முன்னதாக நடப்பு தொடரில் குஜராத் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் மோசமான பார்மில் தவித்து வருகிறார். இந்த சீசனில் மட்டும் அவரது பந்துவீச்சில் இதுவரை 31 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையில் முகமது சிராஜ் உடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. முகமது சிராஜ்/ரஷீத் கான் - 31 சிக்சர்கள்
2. ஹசரங்கா/சாஹல் - 30 சிக்சர்கள்
3. பிராவோ - 29 சிக்சர்கள்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் வீண் : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:28:52 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு சச்சின், கோலி வாழ்த்து!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:13:32 PM (IST)

நாக்-அவுட் சுற்றில் இமாலய இலக்கை விரட்டி: இந்திய மகளிர் அணி உலக சாதனை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 11:27:56 AM (IST)

கிளட்ச் செஸ் போட்டி: நகமுராவை பழிதீர்த்தார் குகேஷ்
புதன் 29, அக்டோபர் 2025 8:27:40 AM (IST)

ஷ்ரேயாஸ் உடல்நிலை சீராக உள்ளது: சூர்ய குமார் தகவல்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:12:38 PM (IST)

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 4:16:16 PM (IST)


.gif)