» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: சென்னையை வென்றது ராஜஸ்தான்
புதன் 21, மே 2025 10:46:30 AM (IST)

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது.
ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸில் டெவன் கான்வே 10, உா்வில் படேல் 0 ரன்களுக்கு வெளியேறினா். அதிரடி காட்டிய ஆயுஷ் மாத்ரே - ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சோ்த்தது.
இதில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் சோ்த்த ஆயுஷ் ஆட்டமிழந்தாா். 5-ஆவது பேட்டராக ரவீந்திர ஜடேஜா களம் புக, அஸ்வின் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். அப்போது வந்த டெவால்டு பிரெவிஸ் விளாசத் தொடங்க, ஜடேஜா 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தாா்.
அப்போது இணைந்த பிரெவிஸ் - ஷிவம் துபே கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. பிரெவிஸ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
துபே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, கேப்டன் தோனி 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் அன்ஷுல் காம்போஜ் 5, நூா் அகமது 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் யுத்வீா் சிங், ஆகாஷ் மத்வல் ஆகியோா் தலா 3, துஷாா் தேஷ்பாண்டே, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 188 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, வைபவ் சூா்யவன்ஷி 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57, கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டனா்.
ரியன் பராக் 3 ரன்களுக்கு வீழ, துருவ் ஜுரெல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 31, ஷிம்ரன் ஹெட்மயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் அஸ்வின் 2, காம்போஜ், நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் வீண் : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:28:52 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு சச்சின், கோலி வாழ்த்து!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:13:32 PM (IST)

நாக்-அவுட் சுற்றில் இமாலய இலக்கை விரட்டி: இந்திய மகளிர் அணி உலக சாதனை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 11:27:56 AM (IST)

கிளட்ச் செஸ் போட்டி: நகமுராவை பழிதீர்த்தார் குகேஷ்
புதன் 29, அக்டோபர் 2025 8:27:40 AM (IST)

ஷ்ரேயாஸ் உடல்நிலை சீராக உள்ளது: சூர்ய குமார் தகவல்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:12:38 PM (IST)

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 4:16:16 PM (IST)


.gif)