» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா அதிரடி: லக்னோ அணியை பந்தாடிய ஹைதராபாத்!

வியாழன் 9, மே 2024 3:44:02 PM (IST)



ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் காரணமாக  லக்னோ அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத் அணி.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசனின் 57-வது போட்டியில்  லக்னோ - ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்து வீச்சை எந்த வித சிரமமின்றி எதிர்கொண்டு அதிரடியில் வெளுத்து வாங்கினர். டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறிது நேரத்திலேயே அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த லக்னோ அணி எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. முடிவில் வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அடைந்த தோல்வி வாழ்நாள் தோல்வியாகும். சஞ்சய் கோயங்காவே கடுப்பாகி கேப்டன் ராகுலிடம் பேச வேண்டிய நிலையைத் தோற்றுவித்தவர்கள் எதிரணி வீரர்கள் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா.

58 பந்துகளில் 167 ரன்கள் விரட்டப்பட்டது. இதில் 14 டாட் பால்கள் (ரன் எடுக்காத பந்துகள்). மொத்தம் 14 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள். 148 ரன்கள் பவுண்டரி சிக்ஸர்களிலேயே வந்து விட்டது. சிங்கிள், இரண்டு என்பது ஏறக்குறைய இல்லாத மேட்ச் ஆகிவிடும் போல் தெரிந்தது. இதில் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆடிய ஷாட்கள் உண்மையில் திகைப்பூட்டும் ரகத்தை சேர்ந்தவை.



இந்த நிலையில், நேற்றைய போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து அனைவரின் முன்னிலையிலும் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா காட்டமாக பேசியுள்ளார். இந்த காட்சிகள் நேரலையில் வந்த நிலையில், இணையத்தில் கே.எல்.ராகுலின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். எதுவாக இருப்பினும், ஒரு அணியின் கேப்டனை அனைவரின் முன்னிலையிலும் இவ்வாறு தரக்குறைவாக நடத்துவது நல்லதுக்கல்ல என்றும், அடுத்தாண்டு கே.எல்.ராகுல் வேறு அணிக்கு மாற வேண்டும் என்றும் ரசிகள் பதிவிட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory