» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றார் குகேஷ்!!

திங்கள் 22, ஏப்ரல் 2024 11:26:45 AM (IST)



கனடாவில் நடந்த செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வென்று அசத்தியுள்ளார்.

உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவில் நடந்தது. டொரண்டோ நகரில் நடந்த இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் நகமுராவுடன் குகேஷ் மோதினார். நகமுராவுடன் மோதிய போட்டி டிரா ஆனதால் 9 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று குகேஷ் சாம்பியன் ஆனார்.

இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இதேபோல் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு ஆனந்த் மஹிந்திரா, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory