» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 போட்டிகளில் 400 பவுண்டரிகள்: அயர்லாந்து வீரர் சாதனை!

சனி 16, மார்ச் 2024 4:50:51 PM (IST)

டி20 போட்டிகளில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. அதில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். 

இந்த போட்டியில் அடித்த 2 பவுண்டரிகளையும் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அதிக பவுண்டரி அடித்தவர்கள் பட்டியல்:-

1. பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்

2. பாபர் ஆசம் - 395 பவுண்டரிகள்

3. விராட் கோலி - 361 பவுண்டரிகள்

4. ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்

5.டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory