» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் விளையாட ரிஷப் பந்த் உடற்தகுதி : பிசிசிஐ அறிவிப்பு

செவ்வாய் 12, மார்ச் 2024 4:13:15 PM (IST)

ஐபிஎல் போட்டியில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் விளையாட ரிஷப் பந்த் உடற்தகுதி பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

கடந்த 2022, டிசம்பர் மாதம் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் நோக்கி காரில் சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து உருகுலைந்தது. தலை, முதுகு, காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், ரிஷப் பந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் கிரிக்கெட் விளையாட உடற்தகுதி பெறுவதற்காக கடந்த ஓராண்டாக பிசிசிஐ கண்காணிப்பில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த மாதம் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பந்த் உடற்தகுதி பெற்று விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், முதல் சில போட்டிகளில் பேட்டராக மட்டுமே ரிஷப் பந்த் களமிறங்குவார் என்றும், அவரின் உடல் நிலை பொறுத்து கீப்பிங் செய்வார் என்று தில்லி அணியின் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory