» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் : ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!!

செவ்வாய் 5, மார்ச் 2024 5:29:18 PM (IST)

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகின்றன. இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸை நியமித்துள்ளது ஹைதராபாத் அணி நிர்வாகம். 30 வயதான வேகப்பந்து வீச்சாளரான பாட் கம்மின்ஸை கடந்தஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2-வதுஅதிக பட்ச தொகைக்கு ஏலம்எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார் பாட் கம்மின்ஸ். 2023-ம் ஆண்டு சீசனில் ஹைதராபாத் அணியை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எய்டன் மார்க்ரம் வழிநடத்தினார். தற்போது அவர், நீக்கப்பட்டு புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். எனினும் அவர், கேப்டனாகமுதன் முறையாக டி 20 வடிவில்அணியை வழிநடத்த உள்ளார்.

ஐபிஎல் தொடரில் 42 ஆட்டங்களில் விளையாடி உள்ள பாட் கம்மின்ஸ் 45 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கில் 379 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 66* ஆகும். கடந்த 3வருடங்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 3-வது கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆவார். கடந்த 2022-ம் ஆண்டு சீசனில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் செயல்பட்டிருந்தார்.

அந்த சீசனில் ஹைதராபாத் அணி 8-வது இடத்தை பிடித்திருந்தது. இதன்பின்னர் ஹைதராபாத் அணி வில்லியம்சனை விடுவித்தது. 2023-ம்ஆண்டு சீசனில் மார்க்ரம் தலைமையில் விளையாடிய சன் ரைசர்ஸ்ஹைதராபாத் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 4-ல்மட்டுமே வெற்றி பெற்றது. எனினும் மார்க்ரம் அணியில் தொடர்கிறார். புதிய கேப்டன்நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளரும் மாற்றப்பட்டுள்ளார். 

கடந்த சீசனில் பிரையன் லாரா தலைமை பயிற்சியாளராக இருந்தநிலையில் இந்தசீசனில் நியூஸிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் நீக்கப்பட்டு நியூஸிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜேம்ஸ் பிராங்க்ளின் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory