» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

வெள்ளி 29, டிசம்பர் 2023 10:52:05 AM (IST)



தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. 

செஞ்சுரியன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டீன் எல்கர் 185 ரன்கள் விளாசினார். மார்கோ யான்சன் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் பும்ரா.

163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. விராட் கோலி, 82 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். கில் 26 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 34.1 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்தியா. அதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory