» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் வீடு வெள்ளத்தில் இடிந்தது

சனி 23, டிசம்பர் 2023 12:32:24 PM (IST)

தூத்துக்குடியில் மழை-வெள்ளத்தில் தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு இடிந்துள்ளது.

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் 4-வது சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணியில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாசானமுத்து இடம் பெற்றுள்ளார். இதற்கிடையே தூத்துக்குடியில் பெய்த மழை-வெள்ளத்தில் மாசானமுத்துவின் வீடு இடிந்துள்ளது.

இதுகுறித்து மாசான முத்து கூறும்போது, "வெள்ளத்தில் சிக்கி எனது வீடு இடிந்துள்ளது. நான் விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக பெற்றோருக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் வெள்ளத்தில் வீடு இடிந்து விட்டதால் அவர்களால் சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory