» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா டெஸ்ட் தொடர்தான் இங்கிலாந்திற்கு உண்மையான சவால்: மெக்குல்லம்

திங்கள் 4, டிசம்பர் 2023 5:34:56 PM (IST)



இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் இங்கிலாந்தின் பேஸ்பால் கிரிக்கெட்டிற்கு உண்மையான சவால் என்று அந்த அணியின் பயிற்சியாளர்  மெக்குல்லம் கூறினார். 

டெஸ்டில் தொடர் தோல்வியிலிருந்ததால் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் 2022இல் விலகினார். மெக்குல்லம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் கேப்டன் ஆனார். மெக்குல்லம் - பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த அணுகுமுறைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பேஸ்பால் என பெயர் வைத்துள்ளனர். 

அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 25இல் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இது குறித்து பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியதாவது: இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சிறந்த அணியுடன் மோத வேண்டுமெனில் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். இதில் வெற்றி பெற்றால் புகழப்படுவோம் இல்லையெனில் இகழப்படுவோம்.

எங்களது பேஸ்பால் அணுகுமுறையால் உடனடி பலன் கிடைத்துண்டு. ஆனால் இது எங்களுக்கு இன்னும் முழுமையானதாக அமையவில்லை. சில வீரர்கள் 18 மாதங்களாக அவர்களது முழுத்திறனை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். கேப்டனின் வேலை இதை சரி செய்வதுதான் எனக் கூறினார்.  மெக்குல்லம் ஐபிஎல்லில் 73 பந்துகளில் 158 ரன்கள் அதிரடியாக அடித்து நொறுக்கினார். அதனால் பேஸ்பால் என்ற பட்டப்பெயர் இங்கிலாந்துக்கும் வந்தது. இவரது இந்த அணுகுமுறை இங்கிலாந்து கிரிக்கெட்டினையே மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory