» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை': ஐ.சி.சி., அதிரடி நடவடிக்கை

புதன் 22, நவம்பர் 2023 12:40:13 PM (IST)



மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி,சி) தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆண்களை போன்று மகளிரும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அதேபோல் ஆண்களுக்கு இணையாக பதக்கத்தை வென்று வருகின்றனர். இந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவர் விளையாட ஐ.சி.சி., தடை விதித்துள்ளது. கடந்த 9 மாதங்களாக இது குறித்து பல்வேறு தரப்பினருடன் ஐ.சி.சி., ஆலோசனை நடத்தி வந்தது.

இது குறித்து ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஜெப் அலார்டிஸ் கூறியிருப்பதாவது: பாலினத் தகுதி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது விரிவான ஆலோசனை பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அக்கறை காட்டப்பட்டுள்ளது என்றார்.

ஐசிசி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக முதல் திருநங்கை கிரிக்கெட் வீராங்கனையாக சரித்திரம் படைத்த டேனியல் மெக்காஹே, இனி மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவரான மெக்காஹே, கனடா மகளிர் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory