» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோவில்பட்டியில் சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள்!

செவ்வாய் 21, நவம்பர் 2023 10:13:37 AM (IST)



கோவில்பட்டியில் முதலாவது ஹாக்கி இந்தியா சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஆண்கள் அகாடெமி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெறுகிறது

இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் மண்டலம் பி-க்கான முதலாவது ஹாக்கி இந்தியா சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஆண்கள்  அகாடெமி சாம்பியன்ஷிப் 2023 ஹாக்கிப் போட்டிகள் நவம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் சப்-ஜூனியர், பூல் 'எ' பிரிவில் தமிழ்நாடு ஹாக்கி அகாடமி, கேங்பூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி, திருமாவளவன் ஹாக்கி அகாடமி மற்றும் அஸ்வினி போர்ட்ஸ் அகாடமி அணிகளும், பூல் 'பி' பிரிவில் லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி, ஸ்மார்ட் ஹாக்கி அகாடமி ராஜ்பூர், செய்ல் ஹாக்கி அகாடமி மற்றும் கடலூர் ஹாக்கி அகாடமி  அணிகளும் மோதுகின்றன.

ஜூனியர், பூல் 'எ' பிரிவில் தமிழ்நாடு ஹாக்கி அகாடமி, ரிபப்ளிக் ஸ்போர்ட்ஸ் கிளப், ஹூப்ளி ஹாக்கி அகாடமி, ஒடிசா நெவல் டாடா ஹாக்கி ஹை பெர்ஃபார்மன்ஸ் சென்டர், அஸ்வினி ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ஸ்மார்ட் ஹாக்கி அகாடமி ராஜ்பூர் அணிகளும், பூல் 'பி' பிரிவில் பேரார் ஹாக்கி அகாடமி (விதர்ப்ஸ்) அமராவதி, திருமாவளவன் ஹாக்கி அகாடமி, ஆர்.வி.அகாடமி ஆஃப் ஹாக்கி, கடலூர் ஹாக்கி அகாடமி, செய்ல்  ஹாக்கி அகாடமி மற்றும் எஸ்டிடி ஹாக்கி நீலகிரி அகாடமி அணிகளும் மோதுகின்றன.

போட்டியின் முதல் நாளில், நேஷனல் பொறியியல் கல்லூரி, இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். காலை 07.00 மணியளவில்  நடைபெற்ற முதல்  சப்-ஜூனியர் போட்டியில் தமிழ்நாடு ஹாக்கி அகாடமி அணியும், திருமால்வளவன் ஹாக்கி அகாடமி அணியும் மோதின. இதில் 3:0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி அகாடமி  அணி வெற்றிப் பெற்றது.

காலை 08.45 மணியளவில்  நடைபெற்ற இரண்டாவது சப்-ஜூனியர் போட்டியில் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும்,  செய்ல் ஹாக்கி அகாடமி அணியும்  மோதின. இதில் 19:0 என்ற கோல் கணக்கில் செய்ல் ஹாக்கி அகாடமி அணி வெற்றிப் பெற்றது. 

காலை 10.30 மணியளவில்  நடைபெற்ற முதல் ஜூனியர் போட்டியில் தமிழ்நாடு ஹாக்கி அகாடமி அணியும், ராய்ப்பூர் ஸ்மார்ட் ஹாக்கி அகாடமி அணியும் மோதின. இதில் 9:1 என்ற கோல் கணக்கில் ராய்ப்பூர் ஸ்மார்ட் ஹாக்கி அகாடமி அணி வெற்றிப் பெற்றது. 

மதியம் 12.15 மணியளவில்  நடைபெற்ற இரண்டாவது ஜூனியர் போட்டியில் அமராவதி, பேரர் ஹாக்கி அகாடமி (விதர்பா)  அணியும், எஸ்டிடி ஹாக்கி நீலகிரி அகாடமி அணியும்  மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு  சமநிலைப் பெற்றன.

மதியம் 02.00 மணியளவில் நடைபெற்ற மூன்றாவது ஜூனியர் போட்டியில் ஹூப்ளி ஹாக்கி அகாடமி அணியும், ஒடிசா நெவல் டாடா ஹாக்கி  ஹை பெர்ஃபார்மன்ஸ் சென்டர் அணியும்  மோதின. இதில் 9:1 என்ற கோல் கணக்கில் ஒடிசா நெவல் டாடா ஹாக்கி  ஹை பெர்ஃபார்மன்ஸ் சென்டர் அணி வெற்றிப் பெற்றது. 

மதியம் 03.45 மணியளவில் நடைபெற்ற நான்காவது ஜூனியர் போட்டியில் ரிபப்ளிக் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும்,  அஸ்வினி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் போட்டு  சமநிலைப் பெற்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory