» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம்: ஸ்டீவ் ஸ்மித்

செவ்வாய் 7, நவம்பர் 2023 12:29:20 PM (IST)

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும். ஆனால், அரையிறுதிக்குத் தகுதி பெற அந்தந்த அணிகள் கண்டிப்பாக தங்களது கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.

நாங்கள் அரையிறுதியில் இடம்பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். நடப்பு உலகக் கோப்பையின் தொடக்கத்தில் சில தோல்விகளைத் தழுவினாலும், பின்னர் வெற்றிப் பாதைக்குத் திரும்பினோம்.

நாளை எங்களுக்கு மிகப் பெரிய போட்டி உள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என நினைக்கிறேன். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். அவர்களை வெல்வது மிகவும் கடினம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory