» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை தொடர்களில் அதிக தோல்விகள்: ஜிம்பாப்வே சாதனையை சமன்செய்த இலங்கை!

செவ்வாய் 17, அக்டோபர் 2023 11:58:53 AM (IST)

உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணிகள் பட்டியலில் ஜிம்பாப்வே அணியின் சாதனையை இலங்கை சமன் செய்தது.

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், லக்னெளவில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் இலங்கையும், ஆஸ்திரேலியா அணியும் நேற்று மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து, மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 42 முறை தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 தோல்விகளுடன் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory