» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிரிக்கெட்,பேஸ்பால் உட்பட 5 விளையாட்டுகள் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்ப்பு!

செவ்வாய் 17, அக்டோபர் 2023 10:51:48 AM (IST)



கிரிக்கெட், பேஸ்பால் உட்பட 5 விளையாட்டுகள் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141-வது அமர்வு மும்பையில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த அமர்வில் நேற்று, 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 5 புதிய விளையாட்டுகளை சேர்ப்பதற்கு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழு பரிந்துரைத்துள்ள ஐந்து புதிய விளையாட்டுகள் ஐஓசி அமர்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி பேஸ்பால்/சாஃப்ட் பால், கிரிக்கெட் (டி 20), ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகள் 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம் பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளை லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தம் 99 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களில் இருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலிம்பிக்கில் 123 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் கிரிக்கெட் இடம் பெறுகிறது. கடைசியாக 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. இதில் இங்கிலாந்து அணி பிரான்ஸை வீழ்த்தியிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory