» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி: கோவில்பட்டி கல்லூரி அணி சாம்பியன்

ஞாயிறு 8, அக்டோபர் 2023 8:40:51 AM (IST)

கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டியில் கோவில்பட்டி கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கிப்போட்டி நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 15 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணியும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. 

இதில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி அணியும் மோதின. இதில் கே.ஆர். கல்லூரி அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் இயக்குனர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மதிவண்ணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், போட்டி அமைப்பாளர் கந்தசாமி, உடற்கல்வி இயக்குனர்கள் ராம்குமார், சிவராஜ், சிவநேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory