» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி : கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்திய அணி!

சனி 7, அக்டோபர் 2023 3:58:33 PM (IST)



ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது.

டி20 முறையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்துடன் மோதியது.  இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. 10 ஓவருக்கு ஆப்கானிஸ்தான் அணி 50/4 ரன்கள் எடுத்துள்ளது.

அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பிஷ்னோய் தலா 1 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய்- ஜிதேஷ் ஷர்மா இணைந்தி 1 ரன் அவுட்டினையும் செய்துள்ளார்கள்.  18.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் 112/5 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நிற்காத காரணத்தினால் போட்டி ரத்தானது. புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. 

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெற்று வரும்  ஆசியப் போட்டிகளின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மகளிர் கிர்க்கெட் அணி தங்கம் வென்றிருந்த நிலையில் ஆடவர் கிரிக்கெட் அணியும் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory