» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி: சாதனை படைத்த மாணவருக்கு எம்எல்ஏ பாராட்டு

திங்கள் 11, செப்டம்பர் 2023 8:01:43 AM (IST)



உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற விளையாட்டு வீரர் மகாராஜா. இவர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் பார்வையற்றோருக்கான உலக அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியஅணியில் விளையாடினார். இப்போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெறுவதற்கு மகாராஜாவின் பங்களிப்பு இருந்தது. 

இதை தொடர்ந்து மகாராஜாவை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நேரில் அழைத்து பாராட்டி ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் ஊக்கத் தொகை பெற்று தரவும், ஆங்கிலம் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளதுடம், கொரோனா காலத்தில் தந்தை இழந்த மகாராஜாவிற்கு அரசு பணி விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். அவருக்கு மாணவரும், குடும்பத்தினரும் நன்றி தெரிவித்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory