» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச போட்டிகள் : தமிழ்நாடு அணி சாம்பியன்

ஞாயிறு 10, செப்டம்பர் 2023 9:02:01 AM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் சாகசப் போட்டிகளில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியன் கயாக்கிங் - கனோயிங் அசோசியேஷன், தமிழ்நாடு அசோசியேஷன் ஆஃப் கயாக் - கனோயிங் சாா்பில், தென் தமிழகத்தில் முதல்முறையாக பியா்ல் சிட்டி ஓஷன் ஸ்போட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியான கடல் சாகசப் போட்டி தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், நின்றுகொண்டே துடுப்பு வலித்தல், அமா்ந்திருந்து துடுப்பு வலித்தல் என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினா் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. 2 நாள்கள் நடைபெற்ற இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா முத்துநகா் கடற்கரையில் நேற்று நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், சுழற்கோப்பை ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினாா். 

முதல் பரிசாக தங்கப் பதக்கம், ரூ. 10 ஆயிரம், 2ஆம் பரிசாக வெள்ளிப் பதக்கம், ரூ. 7 ஆயிரம், 3ஆம் பரிசாக வெண்கலப் பதக்கம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டன. விழாவில், தூத்துக்குடி அக்வா அவுட்பேக் நிா்வாக இயக்குநா் அா்ஜுன் மோத்தா, ஒருங்கிணைப்பாளா்கள் மெய்யப்பன், ரோஜா், சதீஷ், மிதுன், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், பகுதிச் செயலா்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory