» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கள்ளக்கடல் எச்சரிக்கை: மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:29:15 AM (IST)
இந்திய பெருங்கடலில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கேரளா, தெற்கு தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் உயர் அலைகள் மற்றும் கடல் சீற்றம் (கள்ளக்கடல் - Swell Surge) ஏற்படக்கூடும் என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்களுக்கான அவசரப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடற்கரை மற்றும் தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் திடீரென அலை அலையாக சீறிப் பாய வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாட்டுப்படகுகள் கரையோரம் மற்றும் குறைந்த ஆழமுள்ள பகுதிக்கு அருகில் செல்ல வேண்டாம்.
கரையில் அல்லது கடலில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைவதைத் தவிர்க்க, படகுகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை:
கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதையோ, குளிப்பதையோ அல்லது நீந்துவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த எச்சரிக்கை அறிவிப்பினை கடலோரக் கிராமங்களில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு மீன்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விக்சித் பாரத் 2047: கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உருவாக்கிய கல்விக்கொடி & லோகோ!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:03:37 PM (IST)

மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:43:30 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

மணல் திட்டில் கார் மோதி விபத்து: 6 பேர் காயம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:19:18 AM (IST)


